சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு - கேரள மாநில அரசுக்கு காங்., பாஜக கண்டனம்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்ற போதிலும், இந்து இயக்கங்கள் மற்றும் தேவசம்போர்டு இதனை எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக முதல்மந்திரி பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையை அடுத்து, சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேவசம்போர்டின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தாலா, பக்தர்களின் நம்பிக்கையின் பக்கமே காங்கிரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், சபரிமலை கோவில் பக்தர்களுக்கே தங்களது முழு ஆதரவும் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவு யுவ மோர்சா மற்றும் மகிளா மோர்சா ஆகிய அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சாமியே ஐயப்பா என கோஷமிட்டவாறு நடைபெறும் இந்த பேரணியில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மகிளா மோர்சா அமைப்பின் கேரள மாநில தலைவர் சோபா சுரேந்தரன், சபரிமலை கோவிலின் புனிதம் அறிந்த கேரள மாநில பெண்கள் அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து முறையிட மாநில அரசு மறுத்து இருப்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை உடைப்பதாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளார். 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018