மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு : டிசம்பர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

திமுக தலைவர் மு.கஸ்டாலினை, திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து டிசம்பரில் திருச்சியில் நடக்கும்  தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பகல் 11.50 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார்.

திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடந்தது. பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டை டிசம்பர் 10ம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவரும் பங்கேற்பதாக இசைவு தெரிவித்துள்ளார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை ெபற்ற அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.

இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். 

இதற்காக நான் அந்த தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறேன். தேசிய அளவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு கடிதம் தர இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

அதன் மூலம்தான் மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியும். இதுதான் எங்களின் நோக்கமாகும். கருணாசை, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சந்தித்ததை எனது கட்சி நிர்வாகி வன்னியரசு கண்டித்து முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல. நாடாளுமன்ற தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலினுடன் பேசவில்லை. ஆனால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் குறித்து பேசினோம். தமிழகத்தில் வருகிற 7ம் தேதி மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே அரசு முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும். 

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்று கருணாஸ் சட்டப் பேரவை செயலரிடம் கடிதம் தந்திருக்கிறார். சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்டசபை செயலாளருக்கு இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பதை கண்டித்து வரும் 7ம் தேதி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

இதற்கு திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சாத்திய கூறுகள் தென்படுகின்றன. மீண்டும் திறப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018