இருவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ் போட்டுக்கொள்வது பங்காளி சண்டை: பொன்.ராதாகிருஷ்ணன்

டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டுக்கொள்வது பங்காளிகள் சண்டை. இருவருமே அதிமுகவினர்தான். அதை பற்றி மற்றவர்கள் பேசுவது சரியில்லை என மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான் சந்தித்து பேசினேன். அப்போது, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப்பணியை விரைந்து நடத்தி முடிப்பது, கன்னியாகுமரியில் அமையவுள்ள துறைமுக பணி உள்பட தமிழக மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து பேசினேன்.

அதில், அரசியல் எதுவும் பேசவில்லை. கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தபோது, தமிழக திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது சம்பந்தமாக பேசினேன். அதை தவிர அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல.

நான் முதல்வரை சந்தித்து பேசியபோது, அவர், டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்திப்பது பற்றி எதுவும் என்னிடம் கூறவில்லை. அமைச்சர் தங்கமணி, மத்திய அரசின் மசோதாவால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக கூறட்டும்.

பொத்தாம் பொதுவாக அவர் கூறக்கூடாது. அதே நேரத்தில், இலவச 100 யூனிட் மின்சாரமாக இருந்தாலும் சரி, இலவச அரிசி திட்டமாக இருந்தாலும் சரி, அது உண்மையிலேயே தகுதியான ஏழை, எளிய மக்களை சென்றடைய வேண்டும்.

யாருக்கு எந்த பொருளாக இருந்தாலும் சரி, அது யாருக்கு போய் சேர வேண்டுமோ, அவர்களிடம் சேராமல் தவறான நபருக்கு போய் சேருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக மக்களும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இலவச மின்சாரம், இலவச அரிசி, 100 யூனிட் மின்சாரம் ஆகியவை தகுதியானவர்களுக்கு கிடைக்காமல், வசதி படைத்தவர்களுக்கு கிடைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பாமர மக்கள் அல்லது தொழில் ரீதியாக உதவிகள் மின்சார கட்டணத்தில் சலுகைகள் கேட்பதை பரிசீலிக்கலாம். 

அது இல்லாமல், ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் இலவசம் என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது. டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டுக்கொள்ளும் சண்டை, அதிமுகவுக்கும், டிடிவி.தினகரனின் அமமுகவுக்கும் இடையே நடக்கும் பங்காளிகள் சண்டை.

தற்போது அவர்கள், இருவிதமாக இயங்கிக் கொண்டு இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், இருவருமே அதிமுகதான். எனவே பங்காளிகளுக்குள் சண்டை ஏற்படுகிறது. அதில் மற்றவர்கள் கருத்து கூறுவது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar