பெட்ரோல், டீசல் மீதான வரி தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று பாமக சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் திண்டிவனம் காந்திசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது: 

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியின் மூலம் பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கின்றது. பொதுமக்களின் மீது வரியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி கொண்டு வந்தால் 28 சதவீதத்துக்கு மேல் வரிவிதிக்க முடியாது. மத்திய அரசை போல மாநில அரசும் வரிவிதிப்பை குறைக்க வேண்டும் , என்றார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019