வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு

வீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

மன்னார் மாவட்டம் ஒரு அழகான பிரதேசம். இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இன,மத வேறுபாடுகள் இன்றி மன ஒற்றுமையுடனும், செயற்பட்டு வருகின்றமையை நான் இங்கு அவதானித்தேன் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மன்னார் தாழ்வு பாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான 'வளனார் புரம்' மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள்  இன்று காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்களாகிய நீங்கள் எதிர் நோக்கும் வீட்டுப்பிரச்சினைக்கு முற்று முழுதாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டு உங்களிடம் கையளிக்கப்படுகின்றது.

உங்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் வேறு யாரையும் நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு பின்னாலும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

உங்களுடைய கால்களுக்கு அருகாமையிலே நாங்கள் வந்து உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை முற்று முழுதாக தீர்த்து வைப்பதற்காகவே நாங்கள் வருகை தந்தோம்.

மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள் என்னிடம் அன்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அந்த கோரிக்கைகள் உரிய அமைச்சுக்களிடம் கலந்துரையாடப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

இந்த வருடம் நிறைவடைவதற்குள் 1500 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படும். உங்களுக்கு தேவையான வீடுகளை நான் உருவாக்கிக் கொடுப்பேன்.

மேலும் தாழ்வுபாட்டு கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீர் செய்து தருமாறு அருட்தந்தை ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விளையாட்டு மைதானமானது உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கூறியது.

உடனடியாக குறித்த மைதானத்தை மேம்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.

மன்னார் மாவட்டத்திற்கு நான் வருகை தந்த போது பல்வேறு விடையங்களை அறிந்து கொண்டேன்.

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்றது.இங்கு 153 கிராம சேவையாளர் பிவுகள் காணப்படுகின்றது. வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டைப்பெற்றுக் கொடுப்பதே எனது காலம் சென்ற தந்தையின் இலக்கு. 

 அந்த வகையிலே மன்னார் மாவட்டத்தில்  5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டைப்பெற்றுக்கொடுக்க காலம் சென்ற எனது தந்தையின் வழியிலே நானும் சேவையாற்றுவேன்.

இன்றைய தினம் 50 வீடுகளை திறந்து வைத்து கையளித்துள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட 200 பயணாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வைத்துள்ளேன்.

இன்று அரசியல் பிரதி நிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள்.

அரசியல் பிரதி நிதிககள் தொடர்பில் மக்களுக்கு தெளிவான ஒரு சிந்தனை காணப்படுகின்றது.

அரசியலில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுகின்றார்கள்?என்ன விதமான பதிலை கூறுகின்றார்கள்? எவ்வாறு உரை நிகழ்த்துகின்றார்கள்? அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்ற தெளிவான ஒரு சிந்தனை மக்கள் மத்தியில் இருக்கின்றது.

மக்களிடம் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுவதற்காக சிலர் அதைச் செய்கின்றேன்,இதைச் செய்கின்றேன் என கூறுபார்கள்.ஆனால் நாங்கள் ஒன்றை பார்க்க வேண்டும்.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா? அவர்களின் முகங்கள் மகிழ்சியில் இருக்கின்றதா? அல்லது கோபத்துடன் இருக்கின்றார்களா? என்பதனை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019