காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க முடியாது - அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேட்டி

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில்  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார். 

ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி , சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :- 

தேர்தல் ஆணையம் நான்கு மாநில தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது, இன்னும் எத்தனை காலம் காங்கிரஸ் கூட்டணிக்காக நாங்கள் காத்திருக்க முடியும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டுமா ?

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலை ஹிரா சிங் மார்க்கத்தின் கோத்வானா கண்ட்ரந்த்ரா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

நிச்சயம் நல்ல முடிவெடுத்து 4 மாநில தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளோம். இதற்காக 2019-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்த்தலில் காங்கிரஸ் உடன்  மெகா கூட்டணி இல்லை என்று அர்த்தம் இல்லை.

சமாஜ்வாதி கட்சி எந்த கட்சியையும் அவமதிக்காது, பொதுத்தேர்தல் சமயத்தில் உத்திரப்பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைப்பது பற்றி அப்போது முடிவு செய்யப்படும். 

மேலும், தேர்தல்களில் வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு பயன்படுத்த வேண்டும். அதற்காக சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

4 மாநில சட்டமன்ற தேர்தலிம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என மாயாவதி ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது முக்கியத்திருப்பமாக பார்க்கப்படுகிறது. 

Ninaivil

திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
யாழ். திருநெல்வேலி
கனடா
10 APR 2019
Pub.Date: April 13, 2019