இலங்கையை அச்சுறுத்தும் இயற்கை - இதுவரை 4 பேர் பலி - இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக எட்டு இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை முதல் கொழும்பில் பல பகுதிகளில் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.அதிவேக நெடுஞ்சாலைகளில் மழை காரணமாக பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019