எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயார்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும், பிரச்சினையான நிலைமைகளை கட்டுபடுத்த, எந்த சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தஇ இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநயக இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு, தாங்கள் தயாராக இருப்பதாக இராணுவத்தின் வட பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளை தளபதி அண்மையில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

2 தினங்களுக்குள் வடக்கில் இயங்கும் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்த தங்களால் முடியும் எனவும் இது தொடர்பில் அரச உயர் மட்ட தரப்புக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கத்தில் இருந்து அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் விரைந்து செயற்பட தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்திருந்த வடமாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் வடக்கில் இராணுவத்தை பயன்படுத்தும் அளவிற்கு பாரிய வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்ற பாங்கில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஆயுதக் குழுக்களால் சிறு சிறு வன்முறைகளே நடத்தப்படுவதாகவும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு காவற்துறை உரிய செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆயுத குழுக்கள் வலுவிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் வடக்கில் சிவில் பாதுகாப்பை உறுதிபடுத்த 6 ஆயிரம் காவற்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை உரிய முறையில் பயன்படுத்தி வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தாம் உதவிகளை மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019