புத்தளம் மக்களின் உரிமைப் போராட்டத்தில், றிசாத்தும் பங்கேற்கிறார்!!


கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Puttalam Human Development , Clean Puttalam அமைப்பினரோடு இணைந்து புத்தளத்தில் இயங்கும் ஏனைய தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் இந்த குப்பைத் திட்டத்திற்கு எதிராக சுழற்சி முறையில் இரவு, பகலாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் புத்தளத்தில் வாழும் மூவின மக்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் , பள்ளிவாசல்கள் நிர்வாகளும் சுழற்சி முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ள அ.இ.ம.கா தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்,  கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக மக்கள் காங்கிரஸ் சார்பில் முக்கிய அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த திட்டத்திற்கு எதிராக அமைச்சர் ரிஷாதும்,  அ.இ.ம.கா பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மைக்காலமாக பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018