பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை பறிபோகும் என்ற சட்டப்பிரச்சினையினை சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் இரண்டு வருட நிறைவு நிகழ்வில் தலைமைத்துவத்தினை மஹிந்த ஏற்க வேண்டும் என்பது கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களது விருப்பமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.