நாட்டை மீண்டும் அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதே எமது ஒரே இலக்கு

அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமன்றி நாட்டை மீண்டும் அபிவிருத்தியை நோக்கி கொண்டுச்செல்வதே தங்களின் ஒரே இலக்காகும் என்று ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

லண்டன் வாழ் இலங்கைப் பிரஜைகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தங்களது இந்த செயற்பாட்டுக்கு லண்டனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2015, ஜனவரி 8 திகதி புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் எனப் பெயரிடப்பட்ட இந்த அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினரை கொள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். இந்தப் பிரசாரத்தையே அவர்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்டார்கள்.

நல்லாட்சி, சுயாதீனம் தொடர்பிலெல்லாம் கதைத்த இந்த அரசாங்கம் தான், ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே மத்திய வங்கியில் பாரிய பிணைமுறி மோசடியில் ஈடுபட்டது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்து வருகிறது எனக் கூறிக்கொண்டிருக்கிறார். இதனால், மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும்வகையில் வரியையும் அதிகரித்துள்ளனர்.

இந்த வரியும் நாட்டின் பொருளாதாரத்துக்கோ அபிவிருத்திக்கோ பயன்படுவதில்லை என்பதுதான் இன்னும் பிரச்சினையாக உள்ளது. அதேநேரம், ஜனாதிபதியைக் கொலைசெய்யத் திட்டமிட்ட விவகாரம் தற்போது நாட்டின் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுவிடயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு எதிராகக் கூட இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

நாம் நீதிமன்றின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கவில்லை. ஆனால், எமது லம்போகினி கார்கள் மற்றும் உலக வங்கிகளில் எமது கணக்குகளில் இருக்கும் 18 பில்லியன் டொலரை கொண்டுவந்துக்காட்டுமாறே பகிரங்கமாக சவால் விடுக்கிறோம்.

இந்தப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவந்தாலே, டொலரின் விலை 100 ரூபாயாக குறைவடைந்துவிடும். இவ்வாறான பொய்யானக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் மட்டும்தான் அரசாங்கம் மும்முரம் காட்டிவருகிறது. அத்தோடு, தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயற்றிட்டங்களையும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவருகிறது.

இவ்வாறு இன்று ஒட்டுமொத்த நாடும் தேசிய ரீதியாக பாரிய பின்னடைவை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பில், சர்வதேச சமூகமும் எதிர்ப்புக்களையோ அல்லது கருத்துக்களையோ கூறவில்லை என்பதுதான் எமது கவலையாக இருக்கிறது.

எனவே அரசாங்கத்தை வீழ்த்துவது மட்டுமன்றி, இந்நாட்டை மீண்டும் அபிவித்திப் பாதைக்கு இட்டுச்செல்வதும்தான் எமது நோக்கமாகும். எனவே, இதற்கு லண்டன் வாழ் இலங்கைப் பிரஜைகள் அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018