சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்

சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மாநிலத்தில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு மாநில பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள அரசை வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா நேற்று கொச்சி வந்தார். அப்போது அவரிடம் சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய-மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியால் எதுவும் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.

சபரிமலை தீர்ப்பை மாநில காங்கிரசார் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் சர்மா, உள்ளூர் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுடன் மத உணர்வுகளை இணைத்து ஒரு சமநிலையை உறுதி செய்வதில் அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள் எனக்கூறினார்.

முன்னதாக சபரிமலை தீர்ப்பை வரவேற்றிருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, இதுவே இறுதியானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018