கர்நாடகா இடை தேர்தல்: முதல்வர் குமாரசாமி மனைவி போட்டி

கர்நாடக மாநில சட்டசபை இடை தேர்தல்களில் மாநில முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட உள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய எம்.பி. தொகுதிகளுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சித்துநயமகவுடாவின் மரணத்தால் காலியாக உள்ள ஜாம் கண்டி ,மற்றும் குமாரசாமி வெற்றி பெற்று ராஜினாமா செய்த ராமநகரா சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி தேர்தல் இடை நடைபெறும் எனவும், 6-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ராமநகரா சட்டசபை தொகுதி இடை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளராக முதல்வரின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக தொகுதி வேட்பாளர் குறித்த அறவிப்பு விரைவில் வெளிவரும் என கூறியிருந்தார். 

பா.ஜ., கட்சியின் எடியூரப்பா கூறுகையில் மூன்று எம்.பி. தொகுதிக்கான வேட்பாளர்கள், சட்டசபை தொகுதிக்ககான வேட்பாளர்கள் குறித்து தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாளில் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

தேர்தல் கமிஷனின் லோக்சபாவுக்கான தேர்தல் அறிவிப்புப குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மாநில சட்டபைக்கான ஆட்சி காலம் நான்கரை ஆண்டுகாலம் உள்ள நிலையில் சட்டசபை கெதாகுதிக்ககான இடைத்தேர்தல் அறிவிப்பு தேவையானது தான்.

அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் லோக்சபா இடை தேர்தல் அறிவிப்பு கேள்விகளை எழுப்புகிறது. மேலும் இந்த எம்.பி தொகுதிகளுக்கான இடை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திக்க வேண்டும் என கூறி உள்ளார்.

துணை முதல்வர் பரமேஸ்வரா கூறுகையில் தேர்தல் கமிஷனின் மூன்று எம்.பி., தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என கூறி உள்ளார். 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019