பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடக்கும்- இளங்கோவன்

பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரலாறு காணாத வகைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. யானைப்பசிக்கு சோளப்பொறியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.

தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. முதல்வரை கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.

டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க செல்கிறாரே....தவிர பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல.

நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார். 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019