மீன்பிடித் துறையில் இலங்கைக்கு உதவுகிறது நோர்வே

இலங்கையின் மீன்பிடித் தொழிற்றுறையை விருத்தி செய்வதற்காக, தனது நாட்டின் நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு, நோர்வே உறுதியளித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (07) தெரிவித்தார்.

நோர்வே பிரதமர் எமா சோல்பேர்கை, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை சந்தித்த பிரதமர், இணைந்த ஊடகச் சந்திப்பிலும் பங்குகொண்டார்.

கடந்த காலங்களில், நோர்வேயால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு, இதன்போது நன்றி தெரிவித்த பிரதமர், ஹம்பாந்தோட்டை போன்ற, கிராமப்புறப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, நோர்வேயின் உதவிகள் கிடைக்கப்பெற்றன எனத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் சமாதானத்தைப் பேணுவதற்கும், இலங்கையில் மீன்பிடித் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்வதற்கும், நோர்வேயின் உதவிகளை, இலங்கை நாடியுள்ளது எனத் தெரிவித்தார்.

இரு தலைவர்களும், நிலைத்திருக்க்கூடிய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு, இந்து சமுத்திரத்தை, நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி வலயமாக மாற்றுவது குறித்து ஆராய்ந்தனர்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018