1983 இல் நடந்தது தமிழ் இனத்துக்கு எதிரான வன்முறை; சஜித் பிரேமதாஸ

1983ஆம் ஆண்டில், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனக்கலவரம் இல்லை என்றும், அது இனத்துக்கு எதிரான வன்முறை எனவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்று தெரிவித்துள்ளார்.   

தென்மராட்சி, மந்துவில் பகுதியில் நேற்று “நாவலர் கோட்டம்” மாதிரிக் கிராமத்தில் வீடுகளை வழங்கும் நிகழ்விலேயே, அமைச்சர் சஜித் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினாரென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

“அமைச்சருடன் நாங்கள், இங்கு பேசி நடந்து வருகின்ற போது, ‘1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம், அது இனக்கலவரம்’ என்று ஒருவர் கூறினார். அதன் போது அமைச்சர் உடனடியாகவே, ‘1983ஆம் ஆண்டு நடந்ததை, இனக்கலவரம் என்று நான் ஒரு போதும் சொல்லுவதில்லை. அது, இனத்துக்கு எதிரான வன்முறை. அதனால், நாங்கள் எல்லோரும் வெட்கப்படுகின்றோம்’ என்று சொன்னார்” என்று குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட 1983ஆம் ஆண்டில், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பிரதமராகப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018