இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி- பிராவோ, பொல்லார்ட்டுக்கு அணியில் இடமில்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, பொல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

 இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் வருகிற 12-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் ஒருநாள் தொடர் 21-ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 25 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது

வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரீன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை இதனால் அவர்களின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் இனி கேள்விக்குறியே. இதேபோல் 20 ஓவர் போட்டி அணியிலும் அவர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

இந்த 3 பேரும் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற மிகச் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பிராவோவும் பொல்லார்ட்டும் கரீபியன் பிரியர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துக்கும் பிராவோவுக்கும் ஏற்கனவே ஊதிய விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் ஒரு நாள் போட்டி அணியில் விளையாடி 4 ஆண்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 ஆண்டுகளும் ஆகிறது.

ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி விரைவில் அறிவிக்கப்படும். 

Ninaivil

அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019

Event Calendar