இடைக்கால அரசு அமைக்க முற்பட்டால் ஐ.தே.க தனி அரசு அமைக்க முயற்சிக்கும்

ஜீ.எல் பீரிஸ் அறிவித்துள்ளது போன்று இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு, தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நேற்று தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அணியுடன் கூட்டு சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தமது அதிருப்தியை எம்மிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுதந்திரக்கட்சியுடன் மஹிந்த அணியினர் இணைக்கப்பட்டால் சுமார் 10 தொடக்கம் 15 உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைவதற்கு தயாராக உள்ளனர்.

அவர்களையும் இணைத்துக் கொண்டு ஐ.தே.க தனி அரசாங்கம் அமைக்குமென்றும் அவர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே துஷார இந்துனில் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியினர் வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து தமது பலத்தை நிலைநாட்ட முடியும்.

அதனைவிடுத்து மக்களால் ஒதுக்கப்பட்ட திருடர்கள் கும்பலை இணைத்துக் கொள்வது இச்சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக அமையாதென்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தீர்மானத்துக்கு உடன்படமாட்டாரென்ற நம்பிக்கையை பின்வரிசை எம்.பிக்கள் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் துஷார இந்துனில் எம்.பி மேலும் விளக்கமளித்ததாவது-,

மஹிந்த அணியினர் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று ஜி.எல் பீரிஸின் வீட்டில் கூடி ஆராயவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக ஐ.தே.க சிறிதும் கலவரம் அடையவில்லை.

அவர்கள் இடைக்கால அரசாங்கம் அமைத்தால் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தனி அரசாங்கம் அமைக்க ஐ.தே.க தயாராக உள்ளது.

சுதந்திரக் கட்சி மஹிந்த அணியுடன் கூட்டு சேர்ந்தால் கட்சியிலிருந்து வெளியெறி ஐ.தே.கவுடன் இணைவதற்கு சுமார் 10 தொடக்கம் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி மக்கள் எமக்கு வாக்களித்தனர். இந்நிலையில் மீண்டும் அதே திருடர்கள் கும்பலை இணைத்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar