மகளிர் ஒருநாள் கிரிக்கெட் - பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம்

வங்காளதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம் அணி.

பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.

அதனால் பாகிஸ்தான் மகளிர் அணியினர் 34.5 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகமாக கேப்டன் ஜவேரியா கான் 29 ரன்கள் எடுத்தார்.

வங்காளதேசம் அணி சார்பில் கதிஜா துல் குப்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து, 95 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடியது. பர்கனா ஹக் 48 ரன்களும், ருமானா அகமது 34 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், வங்காளதேசம் அணியினர் 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Ninaivil

அருணாசலம் லோகநாதன்
அருணாசலம் லோகநாதன்
காரைநகர் சக்கலாவோடை
உருத்திரபுரம், கிளிநொச்சி
25.04.2019
Pub.Date: April 26, 2019
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
யாழ். சாவகச்சேரி
கனடா
24 APR 2019
Pub.Date: April 25, 2019
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019