இந்துக்களை தமிழக அரசு அச்சுறுத்துகிறது: தமிழிசை குற்றச்சாட்டு

இந்துக்களை தமிழக அரசு அச்சுறுத்துவதாக, பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி மஹா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை துவக்க நிகழ்ச்சி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் முன்பு நடந்தது.

அமைப்பின் மாநில தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்.  பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரனி நிகழ்வில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், இதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் படித்துறைகளை அரசு சுத்தம் செய்யவில்லை. அதனால், 146 படித்துறைகளை இந்து சமய பக்தர்களும், சாதுக்களும், பாஜகவினரும் சுத்தம் செய்தனர். அப்படி இருந்தும் 2 படித்துறைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. 

இந்துக்களை தமிழக அரசு அச்சுறுத்துகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள் தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில்  உட்படுத்தப்பட்டு உள்ளனர். ஆகவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமையே தவிர ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது நியாயம் இல்லை என்றார்.

முன்னதாக புஷ்கரம் விழா குறித்த மலரை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். பாஜ மாவட்ட பொது செயலாளர் ஜெய்கனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018