இராப்போசன விருந்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றார் என்பது உண்மையே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தனது வீட்டில் இரகசியப் பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் எஸ்.பி.திசநாயக்கவில் இல்லத்தில் சந்தித்து, இரகசியப் பேச்சு நடத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வந்த நிலையிலேயே, அவர் நேற்று ஒரு அறிக்கை மூலம், அந்தச் செய்திகளை மறுத்துள்ளார்.

எனினும் தனது வீட்டில் அளிக்கப்பட்ட ஒரு சிறப்பு இராப்போசன விருந்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றார் என்பது உண்மையே என்றும் எஸ்.பி.திசநாயக்க கூறியுள்ளார்.

“ அந்த இராப்போசன விருந்தில் சிறப்பான எந்த அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எனினும், அந்த விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மகிந்த ராஜபக்ச வழக்கமான கலந்துரையாடலை நடத்தினார்.

அந்தக் கலந்துரையாடல், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை மையப்படுடுத்தியதாக இருந்தது” என்றும்  எஸ்.பி.திசநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018