வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் மீட்பு

மியான்மர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அரிய வகை வெளிநாட்டு பறவைகளும், அபூர்வமான விலங்குகளும் மியான்மர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்டுவது குறித்து புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதுதொடர்பாக மிசோரமை சேர்ந்த நபரை பிடித்து விசாரித்ததில், இந்த விலங்கினங்கள் மியான்மர் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, அது சென்னை, மும்பையில் உள்ள பண்ணை வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 

அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை வந்தனர். சென்னை புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் அவர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அரிய வகை பறவை இனங்கள், பஞ்சவர்ணக் கிளி, கொண்டைக் கிளி, நீல மஞ்சள் கிளி, சிவப்பு பேராந்தி, அணில் குரங்கு உள்ளிட்ட விலங்கினங்கள் கூண்டுக்குள் அடைக்க வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் 

இதுகுறித்து புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின் படி, இந்த சோதனையில் சுமார் 70 வகையான அபூர்வ உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சர்வதேசளவில் விலங்கினங்களை கடத்தி விற்கும் கும்பலுடன் தொடர்புடைய சிலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018