பந்து ஜனாதிபதியின் கையில் ; மஹிந்தவை பிரதமராக்கினால் நிரூபிக்கத் தயார் ;தினேஷ்

பந்து ஜனாதிபதியின் கைககளிலேயே  இருக்கின்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தால்  புதிய அரசாங்கத்திற்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோமென கூட்டு எதிரணியின்  பாராளுமன்றக் குழுத்தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

இதேவேளை, ஜனாதிபதியே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்.   நாம் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து  காபந்து அரசாங்கத்தை அமைக்கப்போவதாக  தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் கூட்டு எதிரணியின்  நிலைப்பாட்டை  வினவியபோதே  அவர் இதனைக் குறிப்பிட்டார்.   

அவர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய ஆட்சிக்காலத்தில்  நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை வெளிப்படையாகியுள்ளது.  எனவே  புதிய அரசாங்கம் ஒன்று  உருவாகவேண்டியது  அவசியமாகிவிட்டது. தற்போது  சுதந்திரக்கட்சியிலிருந்து அதிகமானோர் வெளியேறி கூட்டு எதிரணியில் இணைந்துகொண்டுள்ளனர். 

எனவே  தற்போது  ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து சுதந்திரக்கட்சியின்  23 பேர் அரசாங்கம்  அமைத்துள்ளனர்.  

ஆனால் அதனை  தேசிய அரசாங்கம் என்று கூறமுடியாது.  எப்படியிருப்பினும் அரசாங்கத்தில் எஞ்சியிருக்கின்ற  23 பேரும்   வெளியேறவேண்டும்.  

அவர்கள் வெளியேறி எம்முடன் இணைந்தால்   புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். சுதந்திரக்கட்சி எம்முடன் இணைந்தால்    எமதுதரப்பு எம்.பி. க்களின் எண்ணிக்கை 96 ஆகிவிடும். அப்படியானால்   மஹிந்த ராஜபக்ஷவை  பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை  உருவாக்க முடியும்.  அப்போது    புதிய அரசாங்கத்திற்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்க  நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

மஹிந்த ராஜபக்ஷவே தற்போது  மக்களினால் விரும்பப்படுகின்ற தலைவராக இருக்கின்றார். எனவே  அந்த நிலைமையை உணர்ந்து அவரை பிரதமராக நியமிக்கவேண்டியது  நாட்டின் தலைவரின் கடமையாகும்.  தற்போது பந்து  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் கைகளிலேயே உள்ளது.  அவர்  எவ்வாறான தீர்மானத்தை  எடுக்கப்போகின்றார் என்பதைப் பார்ப்போம் என்றார். 

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018