உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச சென்னையிலேயே இடம் இருக்கு.. பொன். ராதாகிருஷ்ணன்

உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. சென்னையிலேயே நிறைய இடம் இருக்கு என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை வந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உட்கட்சி பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினாரா என்று கேட்டனர்.அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், உட்கட்சிப் பிரச்சினை குறித்துப் பேச டெல்லிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லையே. சென்னையிலேயே நிறைய இடம் இருக்கிறதே. அங்கேயே பேசலாமே.

முதல்வர் பிரதமரை சந்தித்தது தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நரேந்திர மோடி அரசு அமல்படுத்தி வரும் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்துமாகத்தான் இருக்க முடியுமே தவிர வேறு இருக்க வாய்ப்பே இல்லை.தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்துள்ளது. அதன் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. வரும் தேர்தலில் இது நிரூபணமாகும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019