புரோ கபடி லீக் போட்டி- தமிழ்தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- தபாங் டெல்லி அணிகளும் மற்றோரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 

சென்னை நகரை மையமாக கொண்ட அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. நேற்றைய 2-வது ஆட்டத்தில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவிடம் போராடி தோற்றது.

ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளியுடன் இருக்கும் தமிழ் தலைவாஸ் 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்சை சந்திக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள சுனில்குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சன் ஜெய்ன்ட்ஸ்- ஜோகீந்தர் சிங்நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018