புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான திட்டத்தை அரசாங்கம் எனும் ரீதியில் நாம் வகுத்து வருகிறோம்.

அதற்கிணங்க, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் நாம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். அவர்களும் இதற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும்.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு வாகனங்கள், தொலைப்பேசிகளை கடந்த காலங்களில் விற்றவர்கள், அவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க பணம் வழங்கியவர்கள் எல்லாம் கொழும்பில் தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தத் தருணத்தில் இதற்கு எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதில் எந்தப்பயனும் இல்லை.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். தமிழ் – சிங்கள பேதங்களை மறந்து, நாம் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

மேலும், அவர்கள் இடையூறுகள் இன்றி முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் எனும் வகையில், இன்னும் நாம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு, பொருளாதார கொள்கையைப் பொறுத்தவரை கடந்த அரசாங்கம் மட்டுமன்றி, நல்லாட்சி அரசாங்கத்திலும் நிறையக் குறைகள் காணப்படுகின்றன. இவற்றையும் நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018