வலுவான தொடக்கத்திற்குப் பிறகு சரிந்த ஆஸ்திரேலியா- பிலால் ஆசிஃப் அசத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அமைத்தும் மற்ற வீரர்களின்  சொதப்பலால் அந்த அணி தடுமாறி வருகிறது.

துபாயில் அக்டோபர் 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 486 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மூத்தவீரர் ஹஃபீஸ் மற்றும் சோஹைல் சதமடித்து அசத்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் சிடில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் மற்றும் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் 66 ரன்களும் கவாஜா 85 ரன்களும் சேர்த்து தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

அதன் பின்பு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேறியதால் அந்த அணி 78 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிஃப் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

அந்த அணியின் சிடில் 5 ரன்களோடும் ஸ்டார்க ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019