ஸ்ரீதேவிக்காக மெனக்கெடும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரீதேவியின், வாழ்க்கை வரலாறு படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் மெனக்கெட்டு வருகிறார்.

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.

தற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.

ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018