பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான உருளை தடி எறிதல் (கிளப் துரோ) போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் 16.02 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான உருளை தடி எறிதல் (கிளப் துரோ) போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் 16.02 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

அரியானாவை சேர்ந்த ஏக்தா பியான் விபத்தில் சிக்கி முதுகு தண்டு மற்றும் தோள்பட்டையில் பாதிப்பு அடைந்தவர் ஆவார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் மனிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்றார். டெல்லியை சேர்ந்த மனிஷ் நார்வால் வலது கை ஊனம் ஆனவர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தாகுர் நாராயண் 14.02 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

16 வயதான நாகுர் நாராயண் இடது காலில் குறைபாடு உடையவர் ஆவார். குண்டு எறிதலில் இந்திய வீரர் விரேந்தர், உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ராம்பால், வட்டு எறிதலில் இந்திய வீரர் சுரேந்தர் அனீஷ்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இந்திய வீரர்கள் மோனு சாங்காஸ் (குண்டு எறிதல்), ஆனந்தன் குணசேகரன் (200 மீட்டர் ஓட்டம்), சுந்தர்சிங் குர்ஜர் (வட்டு எறிதல்), பிரதீப் (வட்டு எறிதல்) வீராங்கனை ஜெயந்தி பெஹெரா (200 மீட்டர் ஓட்டம்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

இந்த போட்டியில் இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் மொத்தம் 28 பதக்கங்கள் வென்று 9-வது இடத்தில் உள்ளது. சீனா 78 தங்கம், 34 வெள்ளி, 29 வெண்கலத்துடன் மொத்தம் 141 பதக்கங்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறது. 

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar