தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கைகளை இழந்த சிறுவனுக்காக ரூ.6 லட்சம் திரட்டிய விஷால்!

சண்டக்கோழி’ படத்திற்காக நடிகர் விஷால் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் சின்னத்திரையில் புதிதாக நிகழ்ச்சி ஒன்றின் மூலம் களமிறங்கியுள்ளார். அதற்கு ‘சன் நாம் ஒருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இதன் முதல் எபிசோட் மிகவும் மனதை உருக்கக்கூடிய வகையில் நடந்து முடிந்துள்ளது. அதில் நடிகர் கார்த்தியும் இணைந்தது சிறப்புக்குரியது. இந்த நிகழ்ச்சியில் பெலிக்ஸ் என்ற 18 வயது சிறுவன் குறித்த விஷயம் முக்கியத்துவம் பெற்றது. எலக்ட்ரிக் ஷாக் மூலம் தனது இரு கைகளையும் இழந்தவர். 

புதிதாக கைகளைப் பொருத்திக் கொள்ள ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தோசை சுட்டு, ரூ.1 லட்சம் நிதி திரட்டினார். மேலும் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.50,000 தொகையை வழங்கினார். 

இதேபோல் நடிகர் விஷால் திரைத்துறையில் இருக்கும் தனது நண்பர்கள் மூலம் ரூ.2 லட்சம் திரட்டினார். சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்தது. இதன்மூலம் மொத்தம் ரூ.6 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.இதைக் கொண்டு சிறுவனின் கைகளுக்கு போதிய உதவி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இந்தச் செயல்பாட்டிற்காக நடிகர் விஷாலிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018