எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது! குற்றம் சுமத்தும் ஹிருணிகா

தெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் தொடர்பில் நானோ எனது சட்டத்தரணியோ குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியால் எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,தெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் தொடர்பில் வழங்கு விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிபதி இந்த வழக்கு தொடர்ந்து செல்லாமல் இருதரப்பும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமா என கேட்டிருந்தார்.அந்த நேரத்தில் எனது சட்டத்தரணி இதுதொடர்பில் கலந்துரையாட முடியும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த வழக்கில் நான் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.அத்துடன் நான் குற்றம் செய்யாததாலே வழக்குக்கு சென்றேன். அத்துடன் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். நான் குற்றம் செய்திருந்தால் அன்றே ஏற்றுக்கொண்டிருப்பேன்.

அத்துடன் நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக தனியார் ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டதில் இருந்து எனது ஆதரவாளர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பலரும் என்னை தொடர்ப்புகொண்டு இதுதொடர்பில் கேட்கின்றனர்.

அத்துடன் சரியான தகவல்களை தெரிந்துகொள்ளாமல் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதானது நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

அத்துடன் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் இவ்வாறான பொய்யான செய்தி வெளியிட்டிருப்பதன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும். அதனால் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018