நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு: ராகுல்

மத்திய, மாநில அரசுகள் மக்கள், பெண்கள், விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.

டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூரில் அவர் பேசியதாவது: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டின் பாதுகாவலனாக இருப்பேன் என பிரதமர் மோடி கூறினார். ஆனால், யாரை பாதுகாப்பேன் என கூறவில்லை.

நாட்டில், 1,520 தொழிலதிபர்கள் பிரதமரால் பயனடைந்துள்ளனர். நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு பிரதமர் உதவி செய்துள்ளார். ஆனால், விவசாயிகள், இளைஞர்களுக்கு உதவவில்லை.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய அரசில் 3.5 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் விவசாயிகளுக்கு உதவவில்லை.

அவர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளன. சிறு குறு தொழில், பொது மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அரசுசெயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018