1000 ரூபாய் அதிகரிப்பில் தோட்ட சங்கங்கள் விடாப்பிடி

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கு நேற்று (09) நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்பதில் சங்கங்கள் விடாப்பிடியாக இருந்ததால், நேற்றைய பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படவில்லை. இதனால், மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டு ள்ளது.

கடந்த பேச்சுவார்த்தையின்போது நாட் சம்பளத்தில் ஐம்பது ரூபாய் அதிகரிப்பு வழங்க முடியும் என்று தெரிவித்த தோட்ட முதலாளிமார் சம்மேளனம், நேற்றைய பேச்சுவார்த்தையின்போது 25ரூபாய் மாத்திரமே வழங்க முடியும் என்று தெரிவித்துவிட்டன. இதனால், கடும் ஆவேசமடைந்த சங்கங்கள் இதற்கு ஒருபோதும் இணங்க முடியாது என்றும் நியாயமான அதிகரிப்பு வழங்காவிட்டால், உடன்படிக்ைகயில் கைச்சாத்திடப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டன.

தற்போது வழங்கப்படும் நாட்சம்பளத்தை 550இலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரிக்காவிட்டாலும்கூட அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் சங்கத் தலைவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், சம்மேளனத்தினரிடையே கலந்துரையாடல் நடத்தி அடுத்த சந்திப்பில் முடிவு சொல்வதாக சம்மேளனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜகிரியவில் உள்ள இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோட்டங்களை நிர்வகிக்கும் 22 கம்பனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

கைச்சாத்திடும் சங்கங்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், எஸ்.அருள்சாமி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், ஊவா மாகாண சபை உறுப்பினர் வே.உருத்திரதீபன், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன், எஸ்.அருள்சாமி, பி.பி.சந்திரசேன முதலானோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் பத்தரமுல்லை அலுவலகத்தில் ஒன்றுகூடிக் கலந்துரையாடிய தொழிற்சங்கத் தலைவர்கள், அதன் பின்னரே முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றதாகத் தோட்டத் தொழிற்சங்கக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே, எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அவ்வாறல்லாமல் ஒரு நாளேனும் தாமதமாகும்பட்சத்தில், நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகவும் இராமநாதன் தெரிவித்தார்.

அதேநேரம், இம்முறை நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க சம்மேளனம் மறுக்குமானால், மலையப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்ெகாள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கங்கள் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதிலிருந்து தவர்த்துக்ெகாள்ள வேண்டும் என்ற கோரிக்ைகயைத் தாம் முன்வைத்ததாகவும் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கும் யோசனையை ஏனைய உறுப்பினர்கள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாதத்தோடு சம்பள ஒப்பந்தம் முடிவடைகிறது. எதிர் வரும் 15ஆம் திகதிமுதல் தொழிலாளர்களுக்குப் புதிய சம்பள முறை ஒன்றின் கீழ் சம்பளம் வழங்கப்படவேண்டும். இவ்வாறான காரணங்களைக் கருத்திற் கொண்டே நாம் சம்பளப் பேச்சுவார்த்தையை ஆகஸ்ட் மாதமே ஆரம்பித்தோம்.

சம்பளம் சம்பந்தமாக முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளத்தில் 10 வீதம் அதிகரிப்பும் வரவுக்கான கொடுப்பனவை இருபது ரூபாயால் அதிகரித்துத் தரவும் தோட்டக் கம்பனிகள் முன்வந்தன. இதனைநாம் முற்று முழுதாகவே நிராகரித்துள்ளோம் என்று தெரிவித்த இராமநாதன், இம்முறை நியாயமான அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால், உடன்படிக்ைகயில் கைச்சாத்திடப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற கம்பனிகளின் கூற்று அடிப்படையற்றதாகும். காரணம் தேயிலையின் விலையில் ஏற்றத்தாழ்வு எப்போதுமே இருந்துகொண்டேதான் இருக்கும். தேயிலையின் விலை அதிகரித்திருந்தபோது அதனை முற்றுமுழுதாக அனுபவித்தவர்கள் தோட்டக் கம்பனியினரே தவிர தொழிலாளர்கள் அல்லர் என்றும் அவர் கூறினார்.

கம்பனிகள் தவறும் பட்சத்தில் அரசாங்கம் தலையிட்டு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்ெகாடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019