இலங்கை –இங்கிலாந்து முதலாவது ஒருநாள் ஆட்டம்

மூன்று டெஸ்ட், 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள். ஒரே டி/20 போட்டிகளில் பங்குகொள்ள இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இன்று 10ம் திகதி முதலாவது ஒருநாள் போட்டியில் தம்புள்ளையில் மோதவுள்ளது.

இலங்கை அணி அண்மைய ஆசியக் கிண்ணத் தொடரின் படுதோல்வியையடுத்து சந்திக்கும் முதல் தொடர் இதுவாகும். பல விமர்சனங்களுக்கு மத்தியில் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை விலக்கிவிட்டு தினேஸ் சந்திமாலின் தலைமையில் இலங்கை அணி களமிறங்கவிருக்கிறது.

இரு அணிகளுக்கிடையில் கடைசியாக 2014ம் ஆண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி 3-2 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று 10 திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகும் இங்கிலாந்துடனான நீண்ட காலத் தொடர் நவம்பர் 27ம் திகதி எஸ். எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகின்றது.

இலங்கை – இங்கிலாந்து ஒருநாள் போட்டி போட்டி வரலாற்றை நோக்குகையில் இலங்கை அணியின் கையே ஓங்கியுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் சகல துறைகளிலும் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வணி கடைசியாக இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உறுதியான மனநிலையில் உள்ளது. அவ்வணியின் துடுப்பாட்ட வரிசை கடைநிலைவரை வலுவான நிலையிலுள்ளதுடன் பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பும் சிறப்பாக உள்ளதால் இலங்கை அணி ஒருநாள் தொடரில் அவ்வணியிடமிருந்து கூடிய சவாலை எதிர்நோக்க நேரிடும்.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு வருடங்களாக பின்னடைவை சந்தித்து வந்துள்ளது. அண்மைய ஆசியக் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் எழுந்த விமர்சனங்களை முறியடிக்க இத்தொடரில் சிறப்பாகச் செயற்பட வேண்டும். இத்தொடர் இலங்கை மண்ணில் நடைபெறுவதால் இலங்கை ரசிகர்களின் முன்னால் அவர்களுக்கு மீண்டும் வருவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இத்தொடரை அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

1982ம் ஆண்டு இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தவுடன் முதல் முதலில் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துடனேயே முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதேதொடரில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட முதல் ஒருநாள் தொடரும் இங்கிலாந்து அணியுடனேயே நடைபெற்றது. எஸ். எஸ் சி. மைதானத்தில் நடைபெற்ற இத் தொடர் 1-−1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது.

இரு அணிக்களுக்கிடையில் இதுவரை 69 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 34 போட்டிகளில் இலங்கை அணியும் 33 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. ஒருபோட்டி சமமானதுடன், இன்னுமொரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான போட்டியில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக இங்கிலாந்து அணி 1983ம் ஆண்டு ரொன்டன் மைதானத்தில் பெற்ற 333 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இலங்கை சார்பில் கூடிய ஓட்டமாக 2006ம் ஆண்டு லீட்ஸ் தைனத்தில் பெற்ற 324 ஓட்டங்களே பதிவாகியுள்ளது.

ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டங்களாக 2014ஆம் ஆண்டு மென்செஸ்டரில் இலங்கை அணி பெற்ற 69 ஓட்டங்களும், இங்கிலாந்து பெற்ற குறைந்த ஓட்டங்களாக 2003ம் ஆண்டு தம்புள்ளை மைதானத்தில் பெற்ற 88 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளன.

இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் அதிகப் போட்டிகளில் பங்குகொண்ட வீரராக மஹேல ஜயவர்தன திகழ்கிறார். இவர் 47 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து சார்பாக இயன் பெல் 26 போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.

இலங்கை- இங்கிலாந்து போட்டி வரலாற்றில் கூடிய போட்டிகளுக்கு தலைமைதாங்கியவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆவார். இவர் 17 போட்டிகளுக்கு தலைமைதாங்கியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக கூடிய வெற்றிகளான 10 வெற்றிகளையும் இவரின் தலைமையில் இலங்கை அணி பெற்றுள்ளது. இங்கிலாந்து சார்பில் அலஸ்டயர்குக் 16 போட்டிகளுக்குத் தலைமை தாங்கி 7 வெற்றிகளைப்பெற்று இங்கிலாந்து சார்பில் கூடிய போட்டிகளுக்குத் தலைமைதாங்கி அதிக வெற்றிகளைப் பெற்ற வீரராகப் பதிவாகிளயுள்ளார்.

அதேவேளை இரு நாடுகளுக்கிடையில் களத்தடுப்பில் 47 போட்டிகளில் விளையாடி 31 பிடிகளை எடுத்த மஹேல ஜயவர்தன இலங்கை சார்பாகவும், 19 போட்டிகளில் 14 பிடிகளை எடுத்த போல் கோலிங்வூட் இங்கிலாந்து சார்பாகவும் அதிக பிடிகளை எடுத்த வீரர்களாகப்பதிவாகியுள்ளனர்.

கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார 44 போட்டிகளில் 1625 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து சார்பில் ஜோ ருட் 19 போட்டிகளில் 825 ஓட்டங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தனி நபர் ஓட்டங்களாக இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் பெற்ற 162 ஓட்டங்களே கூடிய ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. இலங்கை சார்பில் சனத் ஜயசூரிய பெற்ற 152 ஓட்டங்களே பதிவாகியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் அதிக சதம் பெற்ற வீரர்களாக இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனவே 5 சதங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்.

கூடிய விக்கெட் கைப்பற்றியோர் வரிசையில் இலங்கை சார்பில் லசித் மலிங்க 25 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அண்டர்சன் 24 போட்டிகளில் 34 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

தனி நபர் சிறந்த பந்து வீச்சாக 2007 ஆம் ஆண்டு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் இலங்கை வீரர் தில்ஹார பெர்னாண்டோ 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை கைப்பற்றியதே சாதனையாகவுள்ளது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2014ம் ஆண்டு பல்லேகலேயில் நடைபெற்ற போட்டியொன்றில் 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து சார்பில் சிறந்த பந்துவீச்சை நிகழ்தியுள்ளார்.

விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் குமார் சங்கக்கார 44 போட்டிகளில் களமிறங்கி 54 ஆட்டமிழப்புகளுக்கு துணை நின்று கூடிய ஆட்டமிழப்புக்களை செய்துள்ளார். இங்கிலாந்து சார்பில் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 22 போட்டிகளில் 24 ஆட்டமிழப்புக்களைச் செய்துள்ளார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018