காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த கட்ட சந்திப்பு மேல் மாகாணத்தில்

காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகம், தமது அடுத்த கட்ட சந்திப்பை மேல் மகாணத்தில் நடத்தவுள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் தமது அமர்வு இடம்பெறும் என அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டகளிலும் அமர்வு இடம்பெறவுள்ளது.

கடந்த நாட்களில் மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அந்த அலுவலகம் தமது அமர்வை நடத்தியது.எதிர்வரும் நாட்களில் தமது அமர்வை இதர மாவட்டங்களிலும் நடத்தவுள்ளது.

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி, இலக்கம் 24, ஹோர்டன் பிளேஸ் முகவரியிலுள்ள, சர்வதேச தொடர்புகளுக்கும் உபாய ஆய்வுகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில், பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது காணாமல் போனவர்களின் உறவிர்கள் கலந்துக் கொண்டு தமது கருத்துகளை முன்வைக்க முடியும்

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019