யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கையே விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்

இலங்கை படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு  சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கையளித்துள்ளோம் அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங்கையின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019