ஆச்சி மனோரமாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று!

இந்திய திரையுலகம் கண்ட மகத்தான கலைஞர் ஆச்சி மனோரமாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார். மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த அவருக்கு நாடக இயக்குநர் இயக்குநர் சுப்பிரமணியனும், ஆர்மோனியம் கலைஞர் தியாகராஜனும் சூட்டிய பெயர்தான் மனோரமா. 

மனோரமாவின் நாடக நடிப்பைப் பார்த்து வியந்த எஸ்.எஸ்.ஆர் அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் நடித்த முதல் படம் சில காரணங்களால் வெளிவராமல் போக, பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை, அவரது அறிமுக படமாக வெளிவந்து அவரை புகழடையச் செய்தது. திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா, சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் ஆச்சி மனோரமா. தன் எதார்த்த நடிப்பால் தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 55 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தவர் ஆச்சி மனோரமா. நடிப்பையே உயிர்மூச்சாகக் கருதி, மரணம் அருகில் வரும் வரை தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தவர். 

கலைத்துறைக்கு, அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். சாதாரண மேடை நாடகத்தில் ஆரம்பித்து, திரையுலகில் கொடிகட்டி பறந்த ஆச்சி மனோரமாம், வயது மூப்பின் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று காலமானார். 

இறந்தும் பலர் மனதில் குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் 'ஆச்சி' மனோரமா அவர்களின் பெருமை காலம் கடந்தும் சினிமா வரலாற்றில் நிற்கும். 

Ninaivil

செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018