அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா சம்பியனானது மேல்மாகாணம்

எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக குருநாகல் மலியதேவ கல்லூரியைச் சேர்ந்த பசிந்து கொடிக்கார தெரிவானார்.

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 47.54 செக்கன்களைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற பசிந்து கொடிக்கார, இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையொன்றை நிலைநாட்டினார். இவர் போட்டித் தூரத்தை 52.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இம்முறை அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான அதிசிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பசிந்து, கடந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 12.74 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஆர். ரந்தி குரே தெரிவானதுடன், பாய்தல் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த முதலாம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

29 போட்டி நிகழ்ச்சிகளுக்காக 12, 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 5 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், ஆண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 21 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிலைநாட்டப்பட்ட அதிக போட்டிச் சாதனையாகவும் இது பதிவாகியது.

எறிதல் நிகழ்ச்சிகளில் அதிசிறந்த வீரருக்கான விருதை பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க பெற்றுக்கொண்டார். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 55.58 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.21 செக்கன்களில் நிறைவுசெய்த மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியவசம், தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் சட்டவேலி ஓட்டப் போட்டிகளுக்கான அதி சிறந்த வீரராக தெரிவானார்.

ஆண்களுக்கான அஞ்சலோட்ட போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

ஒட்டுமொத்த சம்பியனாகியது மேல் மாகாணம்

34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1440 புள்ளிகளைக் குவித்த மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 505 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 376 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த வருடத்தைப் போல இம்முறை போட்டித் தொடரிலும் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண அணி வெறும் 28 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தையும், 135 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வட மாகாண அணி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு மாகாணங்களும் கடந்த வருடமும் இதே இடங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019