அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம்- குமாரசாமி

திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும், அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் நடந்த தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், மகிஷாசூரன் தசரா விழாவுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்திருக்க கூடாது என்றும், திப்பு ஜெயந்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.

இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை, கலாமந்திராவில் நடந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த குமாரசாமியிடம், பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-

ஒரு விழாவை கொண்டாடுவது அந்த அமைப்புகளின் சொந்த விஷயம். இதில் அரசு தலையிடாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தான் அரசு தலையிடும். சாதி, மதம் மற்றும் மொழியை ஆன்மிக விஷயத்தோடு தொடர்புப்படுத்த கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பது மாநில அரசுக்கு நன்றாக தெரியும்.

திப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கும். அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018