சின்மயின் பாலியல் குற்றச்சாட்டில் உண்மையில்லை- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ்

வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாடகி சின்மயி கூறும் குற்றம்சாட்டில் உண்மையில்லை என நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற "வீழ மாட்டோம்" நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்தாக பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார்.. 

7 தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்த குற்றச்சாட்டு, தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாகவும், உண்மையைக் காலம் சொல்லும்” என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக சின்மயி குறிப்பிட்ட ஸ்விடசர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் “சின்மயி கூறுவது போன்ற சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. வைரமுத்து மீது பொய்யாக குற்றம்சாட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அவர் கண்டனம் தெரிவித்ததாக பல்வேறு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019