வாடகைக்கு வீடு கேட்க பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டார், அதனை காந்தி லலித்குமார் உண்மையாக்கினார் என நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த மாதம் அவரது காதலான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து நிலானியும் காந்தி லலித்குமாரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.காந்தி லலித் குமாரின் தற்கொலை தான் காரணமில்லை என்ற அவர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி நிலானி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நிலானி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பலருடன் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்பினார்கள். தொழிலதிபர், தியேட்டர் அதிபருடன் தொடர்பு என்றார்கள், நான் சொகுசாக வாழ நினைத்திருந்தால் அப்படி செய்திருக்கலாம்.அது உண்மையாக இருந்தால் இப்படி நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். கொடுக்கவேண்டிய இடத்தில் பணம் கொடுத்து போய்கிட்டே இருந்திருப்பேன்.
நடிகை என்றாலே இந்த சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் இப்போது 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்கு கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் என கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள்.அதனால் பொய்யாக ஒரு கணவர் தேவைப்பட்டது, அதை காந்தி லலித்குமார் உண்மையாக்கினார். இவ்வாறு நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.