இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா மீது பாலியல் புகார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயி இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீதும் புகார் கூறியிருக்கிறார். 

அண்மைக் காலமாக நடிகை ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரனாவத் ஆகியோர் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்களைத் தொடர்ந்து பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். 

மேலும் சின்மயி இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா என்று குறிப்பிட்டு ஸ்கிரீன் ஷாட் ஒன்றை இணைத்துள்ளார். அதில், “நான் என் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் ஒரு ஹோட்டலில் என் தோழியுடன் தங்கியிருந்தேன்.

ஹோட்டலுக்கு நான் சென்ற போது, என் தோழி அங்கு இல்லை. அதே ஹோட்டலில் வேறொரு அறையில் தங்கியிருந்த லசித் மலிங்கா அவரது அறையில் என் தோழி இருப்பதாகச் சொன்னார். நான் உள்ளே போனதும் அவர் என்னை படுக்கையில் தள்ளினார். உடனே சுதாரித்துக்கொண்டு நான் என் முகத்தையும் வாயையும் மூடிக்கொண்டேன். ஆனால், அவர் என் முகத்தை பயன்படுத்திக்கொண்டார்.

பிறகு ஹோட்டல் ஊழியர் ஒருவர் கதவைத் தட்டினார். அப்போது நான் உடனே வாஷ்ரூமுக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியேறிவிட்டேன். ஆனால் இதைக் கேட்பவர்கள் நீதான் அவரது அறைக்குச் சென்றாய், அவர் பிரபலமானவர், நீயே அதை விரும்பியிருப்பாய், அல்லது உனக்கு அது தேவைதான் என்று கூறுவார்கள்” என ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (அக்டோபர் 10) இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் அந்நாட்டின் தற்போதைய அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019