பெண்ணுடன் தகாத உறவு – தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்தது என்ன?

பெண்ணுடன் தகாத உறவு தொடர்பாக தட்டிக் கேட்ட கணவரைப் பொலிஸார் வீட்டுச் சிறையில் வைத்த சம்பவம் ஒன்று சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைவாசன், அவரது மனைவி மணிமேகலை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அவ்வப்போது பொலிஸ் நிலையத்தில் மணிமேகலை முறைப்பாட்டை வழங்கி வந்துள்ளார்.

அப்போது அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கலைசெல்வம் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மலைவாசன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் பொலிஸ் அதிகாரியான கலைசெல்வம் அவரது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மலைவாசனை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜன்னல் வழியாக அப்பகுதி மக்களிடையே உதவி கேட்டு அங்கிருந்து வெளியேறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் மலைவாசன் முறைப்பாடு வழங்கியிருந்தார். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸ் ஆய்வாளர் கலைசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018