இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு - மகிந்த

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக நாங்கள் தலையிட விரும்புகின்றோம் மக்களை காப்பாற்ற விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இதுவரை இடம்பெறவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தீர்மானிக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை மாற்றங்கள் குறித்து எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது எவரிற்கும் தெரியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்வதற்கான சூத்திரம் என்னவென்பது குறித்து ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியாது, என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி நிதியமைச்சர் கூட தனக்கு தெரியாது  என தெரிவித்துள்ளார் ஆகவே இதனை தீர்மானிப்பது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ninaivil

அருணாசலம் லோகநாதன்
அருணாசலம் லோகநாதன்
காரைநகர் சக்கலாவோடை
உருத்திரபுரம், கிளிநொச்சி
25.04.2019
Pub.Date: April 26, 2019
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
யாழ். சாவகச்சேரி
கனடா
24 APR 2019
Pub.Date: April 25, 2019
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019