அமெரிக்காவின் வர்த்தக போரை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் – இந்தியாவுக்கு சீனா அழைப்பு..!!

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்வோம் என இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.


இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், ’தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை மட்டும் பாதிக்காது.

இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதை அமெரிக்காவின் நடவடிக்கைகள் தடுக்கும்.

சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுகிறது. சர்வதேச அளவில் பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இருநாட்டு வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

சர்வதேச அளவில் இப்போது நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்றார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018