எஸ்.பி., டிலானுக்கு அரசாங்கத்தை பற்றிப் பேச அருகதையில்லை - மனோ

எஸ்.பி. திசாநயக்கா, டிலான் பெரேரா போனறவர்கள் தான் காபந்து அரசாங்கத்தைப்பற்றி அதிகம் பேசுகிறார்கள். இவர்களுக்கு இந்த அரசாங்கத்தை உடைப்பதற்கும், பேசுவதற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது. உண்மையில் எஸ்.பி திசாநயக்கா, டிலான் பெரேரா போன்றவரகளுக்கு பாராளுமன்றத்தில் இருப்பதற்கே மக்கள் ஆணைகிடையாது என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்க அவர் மேலும் தெரிவிக்கையில்,

காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு யாருக்கும் அமைப்பதற்கு எவருக்கம் உரிமை கிடையாது, மக்கள் ஆணை கிடையாது. காபந்து என்றாலே ஆபத்து என்றுதான் கருத்து. இதனைப்பற்றிய அதிகம் பேசுபவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அமைச்சரவையில் இருந்து தற்போது மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து குடித்தனம் நடத்துபவர்கள். 

குறிப்பான எஸ்.பி திசாநயக்கா, டிலான் பெரேரா போனறவர்கள் தான் எஸ்.பி திசாநயக்கா, டிலான் பெரேரா போனறவர்களுக்கு இந்த அரசை உடைப்பதற்கு, பேசுவதற்கும் எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது. உண்மையில் எஸ்.பி திசாநயக்கா, டிலான் பெரேரா போனறவரகளுக்கு பாராளுமன்றத்தில் இருப்பதற்கே மக்கள் ஆணைகிடையாது. 

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், மைத்திரிபால சிறிசேனவின் புண்ணியத்தால் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. அதன் காரணத்தால் அரசாங்கத்தக்குள்ளே வந்து அமைச்சர்களாகவும் இருந்தார்கள்.  எங்களது அரசாங்கத்தில் அமைச்சர்களாகச் சேர்த்துக் கொண்ட பாவத்திற்க இவ்வாறு கதைக்கிறார்கள். 

வரவு செலவு திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்க கூடாது. உண்மையிலேயே இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்தற்கு பிற்பாடுதான் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனும் நிலைப்பாடு தமிழ்மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாகவும், கருத்தாகவும் உள்ளது. 

கேள்வி : இவ் விடயம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்     : இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்கலாம் என்னிடம் கேட்பது பிரயோசனம் இல்லை.

கேள்வி : தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான முடிவை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என தமிழ் மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றதே?

பதில்     : தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல. என்னிடமும் அவ்வாறான எண்ணம் உள்ளது. உறுதியான நம்பிக்கையான தீர்வுகளை இன்றும் பேசித் தீர்க்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இனப் பதற்றம் இருந்தது. ஆனால் தற்போது இப் பதற்றம் குறைவடைந்து விட்டது. ஆனால் இனப்பரச்சினை உள்ளது. ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றாலும் குறிப்பாக சகோதர முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் அம்பாறையிலும் கண்டியிலும் தெல்தோட்டையிலும் சில சம்பவங்கள் நடைபெற்றாலும் ஒட்டுமொத்தமாக இனப்பதற்றம் என்பது இல்லை என்றார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar