அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ; இதுவே எமது நிலைப்பாடு

அரசாங்கத்தின் பங்காளி கட்சியென்றாலும் அரசியல்கைதி விடுதலை செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டில் நானும் உள்ளேன் என அமைச்சர் மனோ கணேசன்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,


அரசியல் கைதி தொடர்பாக நாங்கள் தீர்வு நிலைப்பாட்டில் நகர்ந்து செல்வதற்காக எனது உள்ளுணர்வு சொல்கின்றது. நாடு முழுவதும் கொந்தளிப்புக்கள், அசாம்பாவிதங்கள், இருக்கின்றது. ஆங்காங்கே அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில்  மக்கள் போராடி வருகின்றார்கள். வட,கிழக்கு உட்பட கொழும்பிலும் மக்கள் போராடுகின்றார்கள். நாங்களும் ஆதரவு வழங்கின்றோம். 

அரசாங்கம் என்பது பல கட்சிகளின் கூட்டாகும். நாங்கள் சொல்வதையெல்லாம் அரசாங்கம் செய்யாது. ஏனைய கட்சிகளின் முடிவும் அரசியல்கைதிகளின் விடுதலைக்கு முடிவுகள் வேண்டும். அரசாங்கம் பொதுநிலைப்பாட்டில் வந்தால் தான் செய்யும். பொதுநிலைப்பாடு அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை. சமீபத்தில் சம்பிக்க ரணவக்க அரசியல்கைதி விடயத்தில் ஒரு பொதுவான யோசனையை முன்வைத்தார். தமிழ் அரசியல்கைதிகளுக்கும், படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனும் யோசனையை முன்வைத்தார். 

 அந்த யோசனையை நானும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அந்த யோசனையை ஆரம்பபுள்ளியாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். 

அதைவிட்டிட்டு எடுத்த எடுப்பிலேயே தமிழ்தரப்பினால், தமிழ்தேசிய கூட்டமைப்பினால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் துரதிர்ஷ்டமானது என நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழர்களுக்குரிய அரசியல்தீர்வு விடயத்தை முழுமையாக நானும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் அதனை ஆரம்பபுள்ளியாக பேசியிருக்கலாம். நான் சம்பிக்க ரணவக்கையை சந்தித்து அரசியல்தீர்வு விடயமாக கேள்விகேட்டேன். 

 தமிழ் அரசியல்கைதி விடயத்திலும், படைத்தரப்புக்கள் விடயத்திலும் சரி நீங்க யாரைக் சொல்கின்றீர்கள் என அவரிடம் கேள்வி கேட்டேன். தனிப்பட்ட காரணத்துக்காக கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், கடத்திச் சென்றவர்கள் எல்லாம் எவ்வாறு விடுதலை செய்யலாம் என அவரிடம் கேட்டேன். 

எனது தொகுதியிலே 11 மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். பிரபல்யமான வழக்கிலே படைத்தரப்புக்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். சம்பிக்க ரணவக்க இல்லை என்றும் அவர்கள் பற்றி நான் கூறவில்லை என்றும் கூறினாரே. 

 தனிப்பட்ட காரணத்துக்காக கொலை, கொள்ளை, செய்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், கடத்தல்கள் செய்தவர்கள் எல்லாம் தண்டணையை அனுபவித்தே ஆக வேண்டும். 

எனவே அரசியல்கைதிகள் விடயத்தில் ஒரு ஆரம்பபுள்ளியாக வைத்து பேச்சுவார்த்தை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்க வேண்டும். அரசியல்கைதி விடயத்தில் கலந்துரையாடல்கள்,பேச்சுவார்த்தைகள்,நடத்தமல் எடுத்த எடுப்பிலே நாங்கள் சென்றால் தமிழர்களின் எதிர்காலம் சந்தேகத்கிடமான நிலையில் செல்லும்.

 வடக்கிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சில முரண்பாடுகள் இருக்கின்றது. குறிப்பாக பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் மதிப்பிடு அறிக்கை கிடைக்காமல் வேலைகள் முடிவுறாமல் உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே அந்தநிலையை மாற்றி புதிய திட்டங்களை வகுத்து அதனை முன்னெடுப்பதற்கு வேறு பிரதேச சபைகளுக்கு பணித்துள்ளேன். இது என்னுடைய முரண்பாடு அல்ல. அது உள்வீட்டு பிரச்சனையாகும்.

 வடகிழக்கில் எமது கட்சி போட்டியிடுவது பற்றி நாங்கள் இதுவரையும் முடிவு எடுக்கவில்லை. மாகாண சபைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு இருந்தால் வரும்போது பார்த்துக்கொள்வோம். நீண்ட வீதியிலே பாதையிலே பயணிக்கின்றோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் நதி ஒன்று குறுக்காக பயணிக்கவுள்ளது என எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ளது. நதியானது கரையை அடைந்தற்கு பிற்பாடுதான் நதியை எவ்வாறு கடப்பது பற்றி யோசிக்க வேண்டும். பாலத்தில் செல்வதா? பாடையில் செல்வதா? நீந்திச் செல்வதா?  அல்லது மந்திரம் போட்டு  நதியின்மீது கடந்து செல்வதா? என்று அப்போது முடிவெடுப்போம். அதற்கு அவசரப்படத்தேவையில்லை என்றார்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018