யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

மகாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாறு இன்றும்கூட உலகில் வியந்து போற்றத்தக்கதொரு வரலாறாக இருக்கின்றது. அவரைப் பற்றி கூறி முடிப்பதற்கு எனக்குத் தரப்பட்டுள்ள நேரம் போதாது என்பதால், இந்தியாவுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த மகாத்மா காந்தி அடிகளாரது வாழ்க்கையில் மிக முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மாத்திரம் கூறலாம் என எண்ணுகின்றேன். அதிலிருந்து இந்த நாடு சில படிப்பினைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அவரது தண்டி யாத்திரை. இது 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி மகாத்மாவின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல்கள் தொலைவில் இருந்த தண்டி வரை 23 நாட்கள் நீடித்த நடைபயணமாகும்.

இந்தியாவை ஆட்சி செய்திருந்த ஆங்கிலேயர்கள் உப்புக்கு விதித்த வரியை எதிர்த்தே அன்று இந்த நடைபயணம் மகாத்மாவினால் ஆரம்பிக்கப்பட்டு, வெற்றி ஈட்டப்பட்டது.

உப்பு, அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பது மகாத்மாவின் எண்ணமாக இருந்தது.

இலங்கை நாட்டில் சூழவும் கடல் இருந்தும் உப்பையும் நீங்கள் இறக்குமதி செய்து, அத்தனைக்கும் வரி விதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மாவின் தண்டி நடைபயணம் போல், ஒரு கண்டி நடைபயணத்தையாவது அவர்கள் சுயமாக ஆரம்பிக்க இதுவரையில் ஆயத்தமாக இல்லை. இனி எப்படியோ, கூற முடியாது. என்றாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். அது, வெற்றியளிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அங்கு காணப்படக்கூடிய உப்பளங்களை மீள உரிய முறையில் அபிவிருத்தி செய்தாலே எமது நாட்டின் நுகர்வுத் தேவைக்கு போதுமான, தரமான உப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். அதே நேரம் ஏற்றுமதிக்கெனவும் பயன்படுத்த முடியும்.

யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் மன்னார், ஆணையிறவு, குறிஞ்சாந்தீவு போன்ற உப்பளங்கள் பாரிய இலாபத்துடன், பல்லாயிரக்கணக்காணோருக்கான வேலைவாய்ப்புகளுடன் செயற்பட்டு வந்திருந்தன. எனவே, இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு அவதானங்களைச் செலுத்த வேண்டும்.

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

மகாத்மா காந்தியின் சிந்தனையில் உருவான 'சர்வோதயா" அமைப்புத் திட்டம். அனைத்து மக்களுக்கும் பொருளாதார பலத்தினை ஏற்படுத்துகின்ற சோசலிச சிந்தனைக் கொண்ட திட்டம் இது.

அந்நியப் பொருட்களைத் தவிர்த்தல், கிராமங்கள் தோறும் உற்பத்தியை பரவலாக்குதல், கிராமத்தின் உற்பத்திப் பொருட்களை நாட்டு மக்களிடம் சேர்த்தல் என்பதே இத் திட்டமாகும்.

கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி, சந்தை மற்றும் நுகர்வை இணைக்கும் வகையில் இத்திட்டம் கட்டியெழுப்பப்பட்டது. இத்திட்டத்தில் விவசாயம் என்பது வெறுமனே தனியார் தொழிற்துறைகளாகப் பார்க்கப்படாமல், கிராம தற்சார்பு உற்பத்திகளாகப் பார்க்கப்பட்டது. இத்தகைய திட்டம் இன்று இந்த நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெறுக்கடி நிலைமையில் ஆராய்ந்து பார்க்க வேண்டியதொரு திட்டமாகும்.

இந்தத்திட்டமானது, கிராமிய கைத்தொழில்களான நெசவு, தோல் பொருட்கள், அலங்காரக் கைவினைப் பொருட்கள், மர தளபாடங்கள், படுக்கை விரிப்புகள், சங்கு, மாலைகள், வேம்பு சவர்க்காரங்கள், தேங்காய் எண்ணெய், தேங்காய்த் தும்பு கயிறுகள் என்று அனைத்துப் பொருட்களையும் ஒருங்கே இணைத்த சந்தைவாய்ப்பாக உருவாக்கப்பட்டிருந்தது.

கிராம மட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியானது இந்த நாட்டின் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி இத்துறையினை வளர்த்தெடுத்தாலே போதிய ஏற்றுமதித் துறைசார்ந்த பயன்களை இந்த நாடு பெறக்கூடியதாகவும், அதிக இறக்குமதிகளை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயணக் கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, அச்சுவேலி மற்றும் வவுனியா பூந்தோட்டம் கைத்தொழிற் பேட்டைகள், வாழைச்சேனை காகித தொழிற்சாலை என பல்வேறுபட்ட கைத்தொழில்

நிறுவனங்கள் அங்கு காணப்படுகின்றன. உப்பு முதல், சீனி வரையில் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். பனை வளத்தை மேலும் மே;படுத்த முடியும். விவசாயத்தை நவினமயப்படுத்தி, அதிக பயன்களைப் பெற முடியும். பழ வகைகள் உற்பத்தியில் வெற்றிகாண முடியும்.

கடல் வளத்தை உரிய முறையில் பாதுகாத்து, நவீனமயப்படுத்தி, உரிய பயன்களைப் பெற்றால், அதுவே இந்நாட்டு எற்றுமதியில் அதிக பங்கினை ஏற்கும்.

அந்த வகையில், கண்ணுக்குப் புலப்படுகின்ற இத்துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல், இறக்குமதிக் கனவுகளில் மாத்திரம் நீங்கள் மிதந்து கொண்டிருந்தால் இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற இயலாமல் போய்விடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மறைந்த கௌரவ மகாத்மா காந்தி அவர்களது 150வது ஆண்டு ஞாபகார்த்தம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம். ஆங்கிலேயர்களிடமிருந்து தமது தாய் நாட்டை விடுவித்துக் கொள்வதற்கு மகாத்மா ஏந்திய வலிமை மிகுந்த ஆயுதமே அகிம்சை வழிப் போராட்டம்.

இன்று, வடக்கிலே எமது மக்கள் வருடக் கணக்கில் தங்களது சொந்த காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வதற்காக, காணாமற் போகச் செய்யப்பட்ட தங்களது உறவுகளைக் கண்டறிவதற்காக அகிம்சை வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாத்மாவின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு ஆங்கிலேயர்கள் செவி மடுத்தனர். ஆனால் இந்த நாட்டில் எமது மக்களின் அகிம்சை வழிப் போராட்டத்திற்கு யாருமே செவிமடுப்பதாக இல்லை.

எமது உரிமைக்கான போராட்டமும் அகிம்சையில் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் எமது மூத்த அரசியல் தலைவர்களின் அகிம்சைப்போராட்டம் மாகாத்மாவின் அகிம்சையைப்போல் வலிமை மிக்கதாக  இருக்கவில்லை.

மகாத்மாவின் சில நடைமுறைகள் குறித்த விமர்சனங்கள் பலருக்கும் இருப்பது போல் எமக்கும் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனாலும் எச்சாமமும் விழித்திருந்து ஆத்ம பலத்தோடு போராடியவர் மகாத்மா காந்தி.

யாழ் கச்சேரி முன்பாகவும் காலிமுகத்திடலிலும் எம் முன்னோர்கள் நடத்திய அகிம்சைபோராட்டங்களை  நான் கொச்சைப்படுத்த விருபவில்லை.

ஆனாலும் அந்த போராட்டங்கள் மாகாத்மாவின் அகிம்சைப்போராட்டங்கள் போல் இடையறாது நீடித்து நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இலக்கை அடைத்தே தீரவேண்டும் என்ற உயிர்த்துடிப்பும், தன்னலமற்ற தாயக விடியலின் உறுதிப்பாடும் எமது மூத்த தலைவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்புபவன் நீயா நானா என்று உசுப்பேற்றும் போட்டி அரசியலுக்குள் மயங்கிக்கிடந்த மூத்த தமிழ் தலைவர்கள்,..

தென்னிலங்கை அரசுகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று  மகாத்மாவைப்போல் ஆத்ம பலத்தை கொண்டிருக்கவில்லை.

தெற்கு நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் புகைவண்டியில் பின் பெட்டியை நோக்கி நடந்து செல்லும் பயணி ஓருவன் தான் வடக்கு நோக்கி செல்வாதாக கூறினானாம்.

அதுபோலவே எமது பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைகளும் நடந்து கொண்டதாக முதுபெரும் இடதுசாரித்தலைவரான தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் கூறியதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது மூத்த அரசியல் தலைவர்கள் தாம் நடத்தியதாக கூறிய அகிம்சைப்போராட்டத்தை உறுதிபட சரிவர நடத்தியிருந்தால்,.

தமிழ் மக்களின் நியாயமான சாத்வீக எண்ணங்களை அன்றைய தென்னிலங்கை அரசுகள் ஏற்று நடந்திருந்தால், இலங்கைத்தீவு இரத்தத்தீவாக ஒருபோதும் மாறியிருக்காது.

மூத்த அரசியல் தலைவரான எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்கள் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றுவார் என்று இறுதியாக தனது இயலாமையை வெளிப்படுத்தி விட்டு மறைத்தது போல்,..

நாமும் எமது மக்களுக்கான உரிமையை நோக்கிய பயணத்தை இடைவழியில் கைவிட்டு சென்றுவிட முடியாது.

அரசியல் தீவின்றி தொடரும் அவலத்தையும், எமது மக்களின் கனவை வெல்வற்கான கடமைகளையும் அடுத்த சந்ததி மீது நாமும் சுமத்திவிட்டு சென்றுவிட முடியாது.

எமது அனுபவங்களும், ஆற்றலும், ஆத்மபலமும், இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற ஆழ்மன விருப்பங்களும் மக்கள் எமக்கு வழங்கும் ஆணைக்காக காத்திருக்கின்றன.

அப்போது சாதித்த நம் கரங்கள் சரித்திரம் படைக்கும். எமது மக்களின் கனவுகள் யாவும் நிச்சயம் நிறைவேறும்.

ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடுவதுபோல் இன்று எமது மக்களும் எவரிடமிருந்தோ வாக்குறுதிகளை பெற்று விட்டு, அவர்களுக்கே வாக்குகளை வழங்கிவிட்டு அடுத்தவர்களிடம் கையேந்தும் துயரநிலையில் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மகாத்மாவின் சிந்தனைகளுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால் இந்த அரசு இன்று நடக்கும் எமது மக்களின் அகிம்சை குரல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

மகாத்மா காந்தியை பற்றி பேசுகின்றவர்கள் அவரது சிந்தனைகளை முடிந்தளவுக்காவது செயற்பாடுகளில் கொண்டு வர வேண்டும். 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018