உத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச மாநில புதிய முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தெரிவு செய்யப்படிருப்பதாக பா.ஜ.க தலைமை இன்று அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், மனோஜ்சின்கா, மகேஷ் சர்மா மற்றும் உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா, லக்னோ மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் முதலமைச்சருக்கான  போட்டியில் இருந்தனர்.

இதனால் கடுமையான போட்டி நிலவியதால் முதலமைச்சரை தெரிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டது.

முதலமைச்சர் தெரிவு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடனும் பா.ஜ.க தலைமை ஆலோசனை நடத்தியது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் லக்னோவில் இன்று மாலை 4 மணிக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, யோகி ஆதித்யநாத் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான  உரிமை கோரி கடிதத்தை கையளித்துள்ளார். 

இந்நிலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டபேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க கூட்டணி ஒட்டு மொத்தமாக 325 இடங்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. 


Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019