மலையக மக்களின் கடுமையான உழைப்பு மாத்திரமே சுரண்டப்படுகின்றது

கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் கடுமையான உழைப்பு மாத்திரமே சுரண்டப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய அரசாங்கம் தோற்றம் பெற மலையக மக்கள் பிரதான பங்கு வகித்தனர். ஆனால் இன்று அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பின்வாங்குகின்றது.

மலையகத்தில் இன்று பொய்யான அபிவிருத்திகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிர்மாணிக்கப்பட்டுள்ள குடியிறுப்புக்களும் அம்மக்களின் விருப்பத்திற்கு முரணாகவே அமைக்கப்பட்டுள்ளன.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கத்தினரதும், முதலாளிமார் சம்மேளனத்தினரது தனிப்பட்ட நலன்களை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது.

இதற்காக அப்பாவி மக்களின் கடுமையான உழைப்பு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளால் சுரண்டப்பட்டுள்ளது. இன்றும் சுரண்டப்படுகின்றது’ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
திருமதி கனகாம்பிகை நவரட்ணம்
யாழ். திருநெல்வேலி
கனடா
10 APR 2019
Pub.Date: April 13, 2019